ஈரோடு: ஈரோடு கேர் 24 மருத்துவமனையில், இதயம் செயலிழந்த நோயாளி ஒருவரின் இதயத்தை, செயல்பட வைத்து, செயலிழப்பினை தடுக்க, உயிர் காக்கும் கருவியை பொருத்தி குணப்படுத்தினர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 59 வயது நபருக்கு மூச்சுதிணறல் மற்றும் படபடப்பு ஏற்பட்டு, ஈரோடு-பெருந்துறை சாலையில் உள்ள கேர் 24 மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே மாரடைப்புக்குரிய மாத்திரைகளை அவர் சாப்பிட்டு வந்தார்.
மருத்துவமனையின் இதய சிறப்பு சிகிச்சை நிபுணர் விஜய் பரிசோதனை செய்ததில், சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டு, அதனால் இதயம் செயலிழப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார். உடனடியாக எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து இதயத்தை செயல்பட வைத்தார்.
மீண்டும் இதயம் செயலிழந்து உயிரிழக்க வாய்ப்பிருந்ததால், அவருக்கு இதயத்தினுள் ஐ.சி.டி.,(I.C.D.,) கருவி பொருத்த முடிவு செய்தனர். பின் அதி நவீன ஜி.இ.-ஐ.ஜி.எ.,530(G.E.-I.G.A-530) கேத் லேப் உதவியுடன் ஐ.சி.டி., கருவியை பொருத்தினர். அவர் ஐந்து நாட்களில் குணமடைந்து வீடு சென்றதாக, டாக்டர் விஜய் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு, இந்த உயிர் காக்கும் ஐ.சி.டி., கருவி பொருத்தப்பட்டால், சீரற்ற துடிப்பு ஏற்படும் போதெல்லாம் கருவியானது இயங்கி, திடீர் உயிரிழப்பை தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.