குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பட்டவர்த்தியை சேர்ந்தவர் ஜோதிமணி, 22. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், திருச்சி - கரூர் நெடுஞ்சாலை, தண்ணீர்பள்ளி கல்லுப்பாலம் அருகே, ஃபாஸ்ட் ஃபுட் கடையில் தனது ஊரை சேர்ந்த கவுதம், கிஷோர், பப்பு ஆகியோருடன் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தண்ணீர்பள்ளியை சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன், 22, லோகேஸ்வரன், 21, பெயின்டிங் தொழிலாளி விஜய், 25, சென்ட்ரிங் தொழிலாளி சிவா ஆகிய நான்கு பேரும், ஜோதிமணியை, தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட ஜோதிமணி குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஜோதிமணியின் வீட்டுக்கு சென்ற, நான்கு நபர்களும், அவரது தந்தை வேலுவை தகாத வார்த்தையில் பேசி, வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் படி, மணிகண்டன், லோகேஸ்வரன், விஜய், சிவா ஆகிய நான்கு பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.