கரூர்: கரூர் மாவட்ட உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில், மாநில பொருளாளர் தேக்கமலை தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு புறம்போக்கு கல்குவாரிகள் அனைத்தும் கூட்டுறவு சங்கம், மகளிர் சுய உதவிக்குழு, மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு விட வேண்டும், போயர் சமுதாய மக்களுக்கு, ஜாதி வாரியாக கணக்கீடு செய்து, ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பதவியை, போயர் சமூகத்தினருக்கு வழங்க வேண்டும், கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியமாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி, பொதுச்செயலாளர் வெங்கடேசன், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மாநகர செயலாளர் தர்மராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.