ஈரோடு: ஆக்கிரமிப்பு என்பதை, நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ௧௨.௬௬ ஏக்கர் நிலத்தில், வருவாய் துறையினர் சாவகாசமாக அளவீடு செய்து முடித்துள்ளனர்.
ஈரோட்டில், 80 அடி சாலை அமைக்க, சி.எஸ்.ஐ., ஆக்கிரமிப்பில் உள்ள, 12.66 ஏக்கர் நிலத்தை மீட்க, பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசு புறம்போக்கு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நிலத்தை அளவீடு செய்ய, வருவாய் துறையினர் முடிவு செய்தனர்.
நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் பிரதீப், மாநகர டவுன் தலைமை சர்வேயர் கவுரி சங்கர், டவுன் ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ. முன்னிலையில், நேற்று காலை அளவீடு செய்யும் பணி நடந்தது. டிஜிட்டல் கருவி மூலம் (டி.ஜி.பி.எஸ்.,) அளவீடு செய்யப்பட்டது. காலை, ௧0:15 மணிக்கு தொடங்கிய பணி, 12:30 மணிக்கு நிறைவு பெற்றது. அளவீடு பணியை ஒட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்படும். ஏப்.,6ல் அரசு புறம்போக்கு நிலத்தில், பொங்கல் வைப்பதாக பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அளவீடு செய்யும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது,