ஆரணி அருகே, மனைவி, ஏழு குழந்தைகளின் கண் எதிரே, கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45. இவரது மனைவி வள்ளியம்மாள், 42. இவர்களுக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
களம்பூரில் மரப்பட்டறையில் கிருஷ்ணமூர்த்தி கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே, தரை மட்ட கிணற்றில் மனைவி மற்றும் குழந்தைகள் கண் எதிரே குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத வகையில் கிணற்று நீரில் மூழ்கி, பரிதாபமாக இறந்தார்.
ஆரணி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், கிருஷ்ணமூர்த்தியை சடலத்தை மீட்டனர். ஆரணி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.