மதுரவாயல், கொளத்துார் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சுதாகர், 30; கார் ஓட்டுனர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, மதுரவாயல் செட்டியார் அகரத்திலிருந்து, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
மதுரவாயல் சர்வீஸ் சாலையில் வந்த போது, அங்கு நின்றிருந்த ஒருவர், 'லிப்ட்' கேட்டதால், அவரை சுதாகர் வாகனத்தில் ஏற்றினார்.
அடையாளம்பட்டு அருகே திடீரென, 'லிப்ட்' கேட்டு வந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, சுதாகரிடம் இருந்த 3 சவரன் நகை, 5,000 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.