கொடுங்கையூர், கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில், கொடுங்கையூர் காவல் நிலைய சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, காவலர் பிரகாஷ் ஆகியோர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து வாகனத்தில் வந்த போலீசார், சிவகுமார், ஜோதிராமன் ஆகியோர், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது மது போதையில் இருந்த இரட்டையர்களான சரவணன், 29, விக்னேஸ்வரன், 29, ஆகியோர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் காயமடைந்த போலீஸ்காரர் ஜோதிராமன்,பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலும், சிவகுமார் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.