பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில், இரு பெண் போலீசாருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை, போலீசார் நடத்தி வைத்தனர்.
பெரும்பாக்கம் காவல் நிலையத்தில், பெண் காவலர்களாக லோகாம்பிகா, மீனா ஆகியோர் பணிபுரிகின்றனர். இவர்களில் லோகாம்பிகா ஐந்து மாத கர்ப்பிணி; மீனா ஏழு மாத கர்ப்பிணி.
இவர்கள் இருவருக்கும் ஐந்து வித உணவு, பழ வகைகள், சீர்வரிசையோடு, பெரும்பாக்கம் போலீசார் வளைகாப்பு நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். இதற்காக பெரும்பாக்கம் காவல் நிலையத்தின் உள்ளும், புறமும் அலங்கரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண் காவலர்களின் கணவர்களும் பங்கேற்றனர்.