சென்னைநாடு முழுதும், மூன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, ஐ.என்.டி.எஸ்.ஓ., ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகின. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, 150 லேப்டாப் மற்றும் 750 டேப்கள் மற்றும் தங்க பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதில், பல்வேறு பகுதிகளில் இயங்கும், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள், 96 பேர் லேப்டாப்கள், 472 பேர் டேப்கள் பெற்று அசத்தியுள்ளனர். தவிர முதல் ஐந்து இடங்களை பிடித்தும் மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டிய சைதன்யா பள்ளியின் இயக்குனர் சீமா கூறுகையில், ''நாடு முழுதும், எந்த பள்ளியும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்தவில்லை. இந்த தேர்வில், சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். வெற்றிக்கு ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தான் முக்கிய காரணம்,'' என்றார்.
தமிழகத்தில் இருந்து மட்டும் 42 மாணவர்கள் லேப்டாப் மற்றும் டேப்களும், இவர்களை தவிர, 199 மாணவர்கள் முதல் ஐந்து இடங்களும், 3,778 பேர் பதக்கங்களும் வென்றுள்ளதாக தமிழக டி.ஜி.எம்., ஹரிபாபு தெரிவித்துள்ளார்.