வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே, உள்வாங்கிய நிலத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அருகே, கூவல்குட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன், 56. இவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலம், அதே பகுதி மலையடிவாரம் அருகில் உள்ளது.
அதில், மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். கடந்த 20ம் தேதி தண்ணீர் பாய்ச்சியபோது, பயங்கர சத்தத்துடன் நிலம் உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை புவியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஹிஜாஸ் பஷீர் தலைமையிலான, 10 பேர் ஆராய்ச்சியாளர் குழு, இரண்டு நாட்களாக பள்ளத்தை ஆய்வு செய்தனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நேற்று கூறுகையில், 'நிலம் உள்வாங்கியதில், 15 அடி அகலம், 40 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மண், பாறை துகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்கு பிறகே, எதனால் பள்ளம் ஏற்பட்டது என தெரியவரும்' என்றனர்.