திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் பல்வேறு கோப்பைக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டியில் நத்தம் என்.பி.ஆர். அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில் ஜி.ஆர்.ஐ. காந்திகிராம் அணி 32 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. விவேக் 39ரன்கள், மாறன் 6,மணிகண்டன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் அணி, 26.1ஓவரில் 3 விக்கெட் இழந்து 156 ரன்கள் எடுத்தது. ஜெயந்த் 56, லட்சுமி நாராயணன் 54ரன்கள், ஆனந்த் 3விக்கெட் எடுத்தனர்.
திண்டுக்கல் என்.பி.ஆர். மைதானத்தில் நடந்த டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில் வேடசந்துார்
சீனிபாலா சிசி அணி 35.5 ஓவரில் 130 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முருகானந்தம் 43ரன்கள், தீபக்கண்ணா 3விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர். அணி 10.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி133 ரன்கள் எடுத்து வென்றது. விஜய்பிரகாஷ் 97(நாட்அவுட்), ரஞ்சன் 32ரன்கள் (நாட்அவுட்) எடுத்தனர்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டியில் திண்டுக்கல் ஆதித் அணி 19.3 ஓவரில் 76 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. லட்சுமண் கிஷோர் 5, கென்னடி 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்சு ஷர்ட்ஸ் அணி 12.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து வென்றது.
முகமதுஆசிப் 30 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். ஸ்ரீ.வீ. மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டியில் திண்டுக்கல் வால்கேனோ ரைடர்ஸ் அணி 25 ஓவரில் 3 விக்கெட் இழந்து 181 ரன்கள் எடுத்தது.
பவித்ரபாண்டியன் 36, காமேஷ் 52(நாட்அவுட்), அவினாஷ்பாண்டியன் 37ரன்கள் எடுத்தனர்.சேசிங் செய்த திண்டுக்கல் வெற்றி அணி,24.2 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
புகழேந்திரன் 37, ஆன்டோபிராங்கோ 32, லோகு 40ரன்கள்,தனுஷ்பாண்டி 4, ஜெயபிரகாஷ் 4விக்கெட் எடுத்தனர்.
ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டியில் ஒட்டன்சத்திரம் சாமுராய் அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்தது.
அஸ்சைன் 32ரன்கள்,ஜீவானந்தம் 3விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ஆரோக்கியசாமி 34ரன்கள், மகேஷ்பூபதி 3 விக்கெட் எடுத்தனர்.
ஸ்ரீ.வி. மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான மூன்றாவது டிவிஷன் போட்டியில் திண்டுக்கல் சாம்பியன்ஸ் அணி 13.4 ஓவரில் 98 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. வேல்முருகன், கவுதம் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த அய்யலுார் கிளாசிக் அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 100 ரன்கள்எடுத்து வென்றது. ஞானபிரகாஷ் 40 ரன்கள் எடுத்தார்.