நிலக்கோட்டை--நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பிரேம்குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது.
தாசில்தார் தனுஷ்கோடி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.
பஸ், ரயில் பாஸ், உபகரண தேவை, இலவச வீட்டு மனை பட்டா, அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெயந்தி, நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் சசிகுமார், டிசம்பர் 3 இயக்க மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ், மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் விவேகானந்தன், அவைத் தலைவர் ஆண்டி பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தனி தாசில்தார் ஆறுமுகம் செய்திருந்தார்.
* கள்ளிமந்தையத்தில் பழனி ஆர்.டி.ஓ., சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தல அலுவலர் சீனிவாசன், தாசில்தார் முத்துசாமி முன்னிலை வகித்தார்.
தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர் சத்திய புவனா, துணைத் தலைவர் தங்கம், ஊராட்ச தலைவர் கணேசன், துணைத் தலைவர் ராஜேஷ் கலந்து கொண்டனர்.