செம்பட்டி--திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் செம்பட்டியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சிவ பாக்கியம், வட்டார துணைத் தலைவர் கருப்பாயி, மாவட்ட பிரதிநிதிகள் பூபதிநமகோடி, பாண்டீஸ்வரி, ரெட்டியார்சத்திரம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் வீரமணி முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பேசினார். வங்கிகளில் மாயமாகும் இந்திய மக்களின் பணத்தை மத்திய அரசு பாதுகாத்தல், ராகுல் மீதான நடவடிக்கைகளை கண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.