கரூர்: அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நின்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, தண்ணீர் வரத்து, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 78 கன அடியாக இருந்தது. இதனால், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு வந்த, தண்ணீர் முற்றிலுமாக நின்றது. இதனால், தடுப்பணை பகுதி வறண்டு காணப்படுகிறது. 90 அடி உயரம் கொண்ட, அமராவதி அணையின் நீர்மட்டம், 52.53 அடியாக உள்ளது.
மாயனுார் கதவணை நிலவரம்
காவிரி ஆற்றில், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 879 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.87 அடியாக இருந்தது. இதனால், நொய்யல் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 38.78 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை.