கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி
நடந்தது.
இதில், கலெக்டர் பிரபுசங்கர், தலைமை வகித்து, மூத்த தமிழறிஞர்களான பெரியசாமி, பழநியப்பன் ஆகிய இருவருக்கும் உதவித்தொகைக்கான ஆணை
வழங்கினார்.
மேலும், மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஆட்சிமொழி சட்ட வார விழாவில், தமிழில் வரைவுகள், குறிப்புகள், சுற்றோட்டக் கோப்புகள் என்ற தலைப்பில் அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்த கரூர் தாசில்தார் மோகன்ராஜுக்கு சான்றிதழ்களும், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதியமைக்காக கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சுப்ரமணிக்கு பரிசுகளையும்
வழங்கினார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ.,லியாகத், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.