விழுப்புரம்: விழுப்புரம் நகரமன்ற காங்., கவுன்சிலரை கொலை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், வண்டிமேட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்ராம், 46; காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் 42வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர், லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடி கதிர் என்கிற மெண்டல் கதிர், 40; என்பவர் தான் ரவுடி என்றும், தனக்கு அடிக்கடி செலவுக்கு பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி வந்துள்ளார். அதற்கு சுரேஷ்ராம் மறுத்துள்ளார். நேற்று பானாம்பட்டு பாதையில் சுரேஷ்ராம் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது கதிர் அவரை வழிமறித்து, தாக்கி, கத்தியால் குத்த முயன்றார்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், கொலை முயற்சி வழக்குப் பதிந்து கதிரை கைது செய்தனர்.