செஞ்சி: பிறந்த சில மணி நேரத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் அடுத்த முட்டத்துார் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று 10:00 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
பொது மக்கள் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குப்பை தொட்டியில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடன், குழந்தையை மீட்டு, ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மாவட்ட குழந்தைகள் நல மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை காப்பகத்தில் சேர்க்க கொண்டு சென்றனர்.