ப.வேலுார்: கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து, வினியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளிலும், நேற்று அதிகாலை மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம் பாளையம், பெரியமருதுார், சின்னமருதுார், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதுார், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் பகுதிகளில் நேற்று அதிகாலை, 1:00 மணி முதல் 4:30 மணி வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து, ஆனங்கூர் பகுதி மக்கள் கூறியதாவது:
திடீரென மின்சாரம் இல்லாததால், இரவு முழுவதும் துாங்க முடியாமல் அவதிப்பட்டோம். மின்வாரிய அதிகாரிகளுக்கு நள்ளிரவு தகவல் தெரிவித்தும், அவர்களால் பழுதை சீரமைக்க முடியவில்லைர். முதியவர்கள், குழந்தைகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடந்து வரும் போது, இது போன்ற மின்தடை ஏற்படாமல் அதிகாரிகள் உரிய பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினர்.