ஓமலுார்:சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் சங்கன் குட்டை அமைத்ததாக கணக்கு காட்டியுய்ள்ள நிலையில், அப்படி ஒரு பணியே நடக்கவில்லை என கவுன்சிலர்கள் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் ஒன்றியக் குழு தலைவர் ராஜேந்திரனிடம், கவுன்சிலர் ரேவதி கொடுத்த புகார் மனுவில், “கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் பொன்னாரங்குட்டையில் தேசிய ஊரக வேலை திட்டத்தில், 'சங்கன் குட்டை' அமைத்ததாகவும், அதற்காக இரண்டு லட்சத்து, 94,473 ரூபாய் செலவு செய்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு பணியே நடக்கவில்லை,” என, கூறியிருந்தார்.
இதுகுறித்து, ஓமலுார் வட்டார வளர்ச்சி அதிகாரி கருணாநிதி, ''முதற்கட்டமாக, குட்டை பணிக்குரிய ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.