சென்னை, சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தில், வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசன் மவுலானா, ''வேளச்சேரி தொகுதி, பேபி நகர், சென்னை மாநகராட்சி பூங்கா அருகில், காலியாக உள்ள இடத்தில், ரேஷன் கடை அமைக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு அமைச்சர் சக்கரபாணி அளித்த பதில்:
சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தால், அப்பகுதியில் ரேஷன் கடை அமைக்கப்படும். பேபி நகர் பகுதியில் ரேஷன் கடை அமைத்தால், அப்பகுதி மக்களுக்கு பயன் அளிக்கும்.
எனவே, சீனிவாசபுரம், விஜயநகரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து, 950 குடும்ப அட்டைகளை பிரித்து, பேபி நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை திறக்க, உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்படும்.
உறுப்பினர் இடம் தேர்வு செய்து கொடுத்தால், அந்த இடத்தில் ரேஷன் கடை கட்ட அனுமதி வழங்கப்படும். கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.