தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கழிவு நீர் உந்து வாகனங்கள் இயக்க, மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாத வாகனங்கள், மாநகராட்சி பகுதிகளில் இயங்க அனுமதி இல்லை.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலும், உரிமம் பெறாமலும் சிலர், கழிவு நீர் வாகனங்களை இயங்கி வருகின்றனர். அவ்வாறு இயக்கப்படும் கழிவு நீர் உந்து வாகனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகவலை, மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.