சென்னை, 'ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு' சார்பில், பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு பள்ளியில் இருந்து, சாஸ்திரி நகர், எம்.ஆர்.சி., நகர் வரை, நாளை காலை 6:00 - 8:00 மணி வரை, அமைதி மற்றும் வன்முறை இன்மைக்காக 'ஜிட்டோ அகிம்சை ஓட்டம்' என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதனால், அடையாறு திரு.வி.க., பாலத்தில் இருந்து, 3வது அவென்யூ நோக்கி செல்லும் வாகனங்கள், எல்.பி., சாலை, சாஸ்திரி நகர், 1வது அவென்யூ வழியாக திருப்பி விடப்படும்.
திரு.வி.க., பாலம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும், எம்.எல்.பூங்கா வழியாக, சாஸ்திரி நகர், ஒன்றாவது அவென்யூ, பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி., சாலை வழியாக செல்லலாம்.
மயிலாப்பூரில் இருந்து, ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சிக்னல் வழியாக செல்லாமல், ஆர்.ஏ.புரம், 2வது பிரதான சாலை, சேமியர்ஸ் சாலை, எஸ்.வி.படேல் சாலை வழியாக செல்லலாம்.