கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே, பன்பாக்கம் பகுதியில், 'போலி' வாஷிங் பவுடர் மூட்டைகளை பதுக்கி, பாக்கெட் போட்டு கடைகளில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கவரைப்பேட்டை போலீசார், நேற்று, அப்பகுதியில் சோதனை நடத்தினர். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், பன்பாக்கம் பகுதி சர்வீஸ் சாலையில் உள்ள கிடங்கு ஒன்றில், 5,000 கிலோ எடை 'போலி' வாஷிங் பவுடர் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிரபல வாஷிங் பவுடரின் பெயரில் உள்ள ஆங்கில எழுத்துகளை இடம் மாற்றி, அதே மாதிரியான டிசைனில் பாக்கெட்டுகளை தயாரித்து, கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
அதே பகுதியில் வசித்தபடி 'போலி' வாஷிங் பவுடர் பதுக்கிய, ஹரியானா மாநிலத்தைச ்சேர்ந்த சுமித், 26, அஜய், 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.