திருச்சி:திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பெண் வி.ஏ.ஓ., வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அகிலா, விவசாயி.
இவருக்கு அப்பகுதியில் இருக்கும் இடத்தை தந்தை பெயருக்கு பட்டா மாற்ற செய்ய, மண்ணச்சநல்லுார் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அந்த மனுவை பரிசீலித்த, அய்யம்பாளையம் வி.ஏ.ஓ., பழனியம்மாள், 44, என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அகிலா, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ஆலோசனைப்படி, நேற்று மதியம், வி.ஏ.ஓ., பழனிம்மாளிடம் 5,000 ரூபாயை அகிலா கொடுத்து போது, மறைந்திருந்த போலீசார், கையும், களவுமாக அவரை கைது செய்தனர்.