கோவை:இந்தியாவிலேயே முதல் முறையாக, 'டிரைவ் இன்' தியேட்டருடன் கூடிய, மனைப்பிரிவு திட்டமான 'ஜி ஸ்கொயர் சிட்டி 2.0' கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம், கோவையில் 110 ஏக்கர் பரப்பில், 'ஜி ஸ்கொயர் சிட்டி 2.0' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறியதாவது:
எங்களின் முந்தைய திட்டமான ஜி ஸ்கொயர் சிட்டியின் மொத்த மனைகளும் 4 நாட்களில் விற்றுத் தீர்ந்தன. இதேபோன்ற திட்டத்தை வாடிக்கையாளர்கள் விரும்பியதால், 'ஜி ஸ்கொயர் சிட்டி 2.0' திட்டத்தை அறிமுகம் செய்கிறோம்.
உடனடியாக வீடு கட்டிக் குடியேறும் வகையில் 90க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன், 1,000 இருக்கை வசதி கொண்ட, டிரைவ் இன் தியேட்டரை கொண்ட இந்தியாவின் முதல் மனைப்பிரிவு திட்டம் இது.
புதை மின்வடம், மழை நீர் வடிகால், அத்திக்கடவு குடிநீர், கிகாபைட் ஆப்டிகல் நெட்வொர்க் இழைகள் என வசதிகள் உள்ளன. கோவை விமான நிலையம், வரவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், டிபன்ஸ் இண்டஸ்ட்ரியல் காரிடார் ஆகியவற்றுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மொத்தம் 1,688 வீட்டுமனைகள் கொண்ட ஜி ஸ்கொயர் சிட்டி 2.0,ல், மனைகள் 3 சென்ட் முதல் ரூ.27 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. 8 வர்த்தகமனைகளையும் உள்ளடக்கியது. மேலும் விவரங்களை , https://www.gsquarehousing.com என்ற இணைய பக்கத்தில் அறியலாம்.