ஊட்டி;சிறுமியை கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஊட்டி கோர்ட் தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் நாடுகாணி பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 27. இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தபோது, நாடுகாணி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2018ம் ஆண்டு ராஜ்குமார் அந்த சிறுமியுடன் வீட்டை வீட்டு வெளியேறி அருகில் இருந்த தனியார் எஸ்டேட்டுக்கு சென்று இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதில், சிறுமி இறந்தார். சிகிச்சைக்கு பின் ராஜ்குமார் குணமடைந்தார்.
சிறுமியின் பெற்றோர் தேவாலா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். விசாரணைக்கு பின், ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராஜ்குமாருக்கு, 17 ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் முகமது ஆஜராகி வாதாடினார்.