சேலம்:சேலம் மாவட்டத்தில், 1,004 கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அறங்காவலர் குழுவினரால் கோவில் வரவு, செலவு கணக்கு, விழா ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மண்டல இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் அடங்கியுள்ளவற்றில், 110; உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் அடங்கியுள்ளவற்றில், 894 என, 1,004 கோவில்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம். குழுவில், 3 - 5 பேர் இருப்பர்.
இதற்கான விண்ணப்பங்களை, சேலம் மண்டல இணை கமிஷனர், உதவி கமிஷனர் அலுவலகம், சரக இன்ஸ்பெக்டரிடம் பெற்றுக்கொள்ளலாம். http:/hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
ஒவ்வொரு கோவில்களுக்கும் கடைசி தேதியாக, ஏப்., 4, 14, 22 என வெவ்வேறு நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்ப படிவத்துடன் ஜாதி சான்றிதழ், வழக்கில் தண்டனை பெற்றவர் இல்லை என்பதற்கான போலீஸ் சான்று, கோவில் சொத்துக்களை அனுபவிக்கவில்லை என்பதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.