வேடசந்துார் -வேடசந்துார் ஒன்றியம் கோட்டூர்,அய்யர் மடம் பகுதியில் காங்., எம்.பி., ஜோதிமணி பொதுமக்களை சந்தித்து தேவைகள்,குறைகளை கேட்டறிந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். காங்., எம்.பி., ராகுலுக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும், அவரது எம்.பி., பதவி பறிக்கப்பட்டது குறித்தும் எடுத்துக் கூறினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டாரத் தலைவர்கள் கோபால்சாமி, சதீஷ்குமார், நிர்வாகிகள் மூர்த்தி, பாண்டியன், கண்ணன் பங்கேற்றனர்.