வேடசந்துார்- -நத்தப்பட்டி ஊராட்சி சொக்கலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வியின் ஓராண்டு நிறைவு விழா நடந்தது. இல்லம் தேடி கல்வியின் ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமணி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் ராமு, சுகந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஞ்சிதா, தி.மு.க., நிர்வாகி முருகேசன் பங்கேற்றனர்.