'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., வழக்கு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு | விழுப்புரம் செய்திகள்| Former Special DGP, case adjourned to 10th | Dinamalar
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., வழக்கு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 



விழுப்புரம், : 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது.

நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., ஆஜரானார். செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., ஆஜராகவில்லை.

இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., முத்தரசி ஆஜரானார். இவரிடம், மாஜி சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து, குறுக்கு விசாரணையை நிறைவு செய்வதற்காக வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X