கள்ளக்குறிச்சி : நீட் மாதிரி வினாத்தாளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஏ.கே.டி., பள்ளி நீட் தேர்வு பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏ.கே.டி., நீட் பயிற்சி இயக்குனர் பிரதாப் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்களில் 'நீட் கிராஷ் கோர்ஸ்' பயிற்சி வரும் ஏப்., 4ம் தேதி முதல் துவங்கவுள்ளது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையம், விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலுார் கனரா வங்கி அருகில் உள்ள ஜெ.எஸ்.கே., காம்பளக்ஸ், கடலுார் செயின்ட் ஜோசப் ஐ.டி.ஐ., வளாகம், விருத்தாசலம் ஜெ.ஏ.ஐ., திருமண மண்டபம் ஆகிய இடங்களில் துவங்குகிறது.
ஏ.கே.டி., பள்ளி 'நீட் கிராஷ் கோர்ஸ்' பயிற்சி வகுப்பில் நாள்தோறும் தேர்வுகள், பகுதி தேர்வு கள், நீட் மாதிரி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களு டன் தென்னியந்திய ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. 63691 46590 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு, நீட் மாதிரி வினாத்தாளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.