விழுப்புரம் : விழுப்புரத்தில், டி.ஐ.ஜி., பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., பாண்டியன் மற்றும் அவரது மனைவி பாரதி பங்கேற்றனர்.
கலெக்டர் பழனி, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., பகலவன், வேலுார் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., க்கள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கடலுார் ராஜாராம், கள்ளக்குறிச்சி மோகன்ராஜ், ஏ.டி.எஸ்.பி., க்கள் கோவிந்தராஜ், தேவராஜ் வாழ்த்திப் பேசினர்.
டி.ஐ.ஜி., பாண்டியன் ஏற்புரையாற்றினார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் பொறுப்பேற்று 2 ஆண்டுகள், ஒரு மாதம் பணி புரிந்துள்ளார். காவல் துறையில் முதன் முறையாக உயர் அதிகாரி ஒருவர் விழுப்புரத்தில் பணி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.