பெண்ணிடம் நகை பறிப்பு | கடலூர் செய்திகள்| Jewel stolen from woman | Dinamalar
பெண்ணிடம் நகை பறிப்பு
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 



விருத்தாசலம் : விருத்தாசலத்தில் 'பைக்' கில் சென்ற பெண்ணிடம் 3 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணாடம் இறையூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி நித்யா, 37. இவர் கடந்த 25ம் தேதி விருத்தாசலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.

சாவடிக்குப்பம் அருகே நித்யா சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X