போளூர்: போளூர் அருகே, டேங்க் ஆப்பரேட்டர் பணிக்கு, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எடப்பிறை பஞ்., தலைவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எடப்பிறை பஞ்., தலைவியாக ஜீவா, 40, உள்ளார். இந்த பஞ்சாயத்தில் டேங்க் ஆப்பரேட்டராக இருந்த கோவிந்தசாமி இறந்து விட்டார். அப்பணியை தற்காலிகமாக அவரது மனைவி பராசக்தி, 42, செய்து வந்தார். 'பணி நிரந்தரமாக வேண்டுமென்றால், ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என, ஜீவா கேட்டார். மேலும், 'இல்லையெனில் வேறு நபரை நியமனம் செய்து விடுவேன்' என மிரட்டினார்.
இது குறித்து, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் பாரசக்தி புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனை படி, பஞ்., தலைவியிடம் பராசக்தி கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார், ஜீவாவை கையும் களவுமாக கைது செய்தனர்.