இதில் இருந்து வருவாய் நிதிக்கு, 26.30 கோடி; குடிநீர் மற்றும் வடிகால் நிதிக்கு, 23.30 கோடி; ஆரம்ப கல்வி நிதிக்கு, 9.10 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மூலமாகவும் நடப்பு நிதியாண்டில், ஏழு கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவுத்துறை மூலமாக, 8 கோடி ரூபாய்; கேளிக்கை வரியாக, 3 கோடி என, 11 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநகராட்சி வணிக வளாகம், பஸ் ஸ்டாண்ட், வாகன நிறுத்தம் மற்றும் சிறு குத்தகை இனங்கள் மூலமாக நடப்பு நிதியாண்டில், 15.9 கோடி வருவாய் கிடைக்கும். ஒப்பந்ததாரர், பிளம்பர், பதிவு கட்டணம் தொழில் உரிமக் கட்டணம், குடிநீர் பாதாள சாக்கடை கட்டணம் மூலமாக, 54.98 கோடி வருவாய் கிடைக்கும்.
இதே போல மாநகராட்சி பணியாளர்களுக்கு நடப்பாண்டு ஊதிய செலவினம், 90.76 கோடி; ஓய்வூதிய பயன்களுக்கு, 25 கோடி ரூபாய்; நிர்வாக செலவினங்களுக்கு, 5.15 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவினங்களுக்காக, 71.17 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிகிறது.
மாநகராட்சி பெறப்பட்ட கடன்களுக்காக அசல் மற்றும் வட்டி செலவினங்கள், 23.88 கோடி ரூபாய் செலவாகும். வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதிகளில் நடப்பு நிதியாண்டில் மூலதன பணிகளுக்காக, 358.16 கோடி செலவாகும். தார்ச்சாலைகளை சீரமைக்க, 7.20 கோடி ரூபாய்; மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற, 5 கோடி ரூபாய்க்கான கருத்துரு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைப்பதற்கு, 10 கோடி ரூபாய்க்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.