அந்தியூர்: அந்தியூர் அருகே கோவிலில், வினோத வழிபாட்டு முறையில், கோவில் நிர்வாகி தேர்வு செய்யப்பட்டார்.
கொளுந்து விட்டு எரிந்த தீயில் துாபக்கால் சிவந்து போனது. அந்த துாபக்காலை கையால் எடுத்து, சுவாமிக்கு ஆராதனை செய்பவருக்கு மட்டுமே, பட்டக்காரர் பதவி கிடைக்கும். இதன்படி அதே பகுதியை சேர்ந்த வடிவேலு, துாபக்காலை கையில் எடுத்து கோவிலுக்கு சென்று ஆராதனை செய்தார். இதை தொடர்ந்து கோவில் பட்டக்காரராக அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். கோவில் குண்டம் விழா வரும் 12ம் தேதி நடக்கவுள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.