டி.என்.பாளையம்: கோபி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலத்தை மூட்டை கட்டி, கிணற்றில் வீசிய காதலனை, போலீசார் கைது செய்தனர்.
கடந்த, 28ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு, லோகேஷுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்வேதா சென்றுள்ளார். கர்ப்பத்தை கலைக்கும் நோக்கில் பரிசோதனை செய்துள்ளார். ஆனால், கருவை கலைக்க முடியாது என்று டாக்டர் தெரிவித்துள்ளார். இதனால் கொங்கர்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு, ஸ்வேதாவை லோகேஷ் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் உணவு வாங்கி வர லோகேஷ் வெளியில் சென்றார். திரும்பி வந்தபோது ஸ்வேதா துப்பட்டாவால் துாக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின், ஸ்வேதாவின் கால்களை கட்டி, வெள்ளை சாக்கு பையில் போட்டுள்ளார். இரவானதும் டூவீலரில் எடுத்து சென்று கிணற்றில் வீசியுள்ளார். தற்கொலைக்கு துாண்டுதல், தடயங்களை மறைத்தல் என இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்து லோகேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர். இதை தொடர்ந்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில், லோகேஷை அடைத்தனர்.