கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி தற்கொலை: மூட்டையில் கட்டி வீசிய காதலன் கைது | ஈரோடு செய்திகள்| Student found dead in well commits suicide: boyfriend arrested | Dinamalar
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி தற்கொலை: மூட்டையில் கட்டி வீசிய காதலன் கைது
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 

டி.என்.பாளையம்: கோபி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலத்தை மூட்டை கட்டி, கிணற்றில் வீசிய காதலனை, போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம் கோபி, நாய்க்கன்காட்டை சேர்ந்த குமார்- மஞ்சுளாதேவி தம்பதி மகள் ஸ்வேதா, 21; கோபியில் தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் அறிவியில் மூன்றாமாண்டு படித்தார். கடந்த, ௨௮ம் கல்லுாரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கொங்கர்பாளையத்தில் தனியார் தோட்டத்து கிணற்றில், சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய பங்களாப்புதுார் போலீசார், மாணவியின் காதலனை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஸ்வேதா படித்த அதே கல்லுாரியில், கொங்கர்பாளையம், தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த -வீருச்சாமி மகன் லோகேஷ், 23, படித்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில் எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த லோகேஷ், கோபியில் உள்ள தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்தார். ஆனாலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகினர். இதில் ஸ்வேதா கர்ப்பமடைந்தார். இதனால் லோகேஷை திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஆனால், லோகேஷ் காரணம் சொல்லி காலம் தாழ்த்தியுள்ளார்.

கடந்த, 28ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு, லோகேஷுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்வேதா சென்றுள்ளார். கர்ப்பத்தை கலைக்கும் நோக்கில் பரிசோதனை செய்துள்ளார். ஆனால், கருவை கலைக்க முடியாது என்று டாக்டர் தெரிவித்துள்ளார். இதனால் கொங்கர்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு, ஸ்வேதாவை லோகேஷ் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் உணவு வாங்கி வர லோகேஷ் வெளியில் சென்றார். திரும்பி வந்தபோது ஸ்வேதா துப்பட்டாவால் துாக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின், ஸ்வேதாவின் கால்களை கட்டி, வெள்ளை சாக்கு பையில் போட்டுள்ளார். இரவானதும் டூவீலரில் எடுத்து சென்று கிணற்றில் வீசியுள்ளார். தற்கொலைக்கு துாண்டுதல், தடயங்களை மறைத்தல் என இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்து லோகேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர். இதை தொடர்ந்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில், லோகேஷை அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X