ஈரோடு: 'கடந்த நான்கு மாதமாக வேளாண் குறை தீர் கூட்டம் நடக்கவில்லை. தற்போதும் சடங்கு, சம்பிரதாயமாக நடக்கிறது.
இதை அளவீடு செய்து, உரியவர்கள் தங்களது நிலத்தை விற்க, வாங்க, பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் நடவடிக்கை இல்லை. கடம்பூர் முதல் அந்தியூர் முரளி வரை, வனவிலங்குகள் காப்பகமாக மாற்றுவதாக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரம் வனப்பகுதியில் நடக்கும் கல் குவாரியில், வெடி வைத்து தகர்ப்பதை தடை செய்ய வேண்டும்.பவானிசாகர், சத்தியமங்கலம் முதல் பவானி வரை மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர்கள், ஒன்பது ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணி செய்து, சட்ட விரோத நீர் உறிஞ்சுவோருக்கு துணை போகின்றனர். இதை எதிர்த்த வழக்கில், தண்ணீர் உறிஞ்சுவோருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆவணங்களை வழங்க உதவுகின்றனர். இவர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
* காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்: காளிங்காராயனில் தரமான மதகு, வால்வுகளை அமைக்க வேண்டும். ஈரோடு பகுதியில் சாயக்கழிவு, தோல் கழிவு, சாக்கடை நீர் கலப்பதை தடுக்க அமைக்கப்பட்ட, பேபி வாய்க்காலில் குப்பை கொட்டி மூடி வைத்து சாயக்கழிவை வெளியேற்றுகின்றனர். அதை முழுமையாக துார்வாரி காக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.