திருப்பூர்:பருத்தி வரத்து சீராக இருப்பதால், பருத்தி நுாலிழை விலையில் எவ்வித மாற்றமும் இல்லையென, நுாற்பாலைகள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 'கோம்டு' ரக நுால் (வரி நீங்கலாக), 16ம் நம்பர் ஒரு கிலோ 251 ரூபாய், 20ம் நம்பர் 254 ரூபாய், 24 ம் நம்பர் 264 ரூபாய், 30ம் நம்பர் 274 ரூபாய்; 34 ம் நம்பர் 287 ரூபாய், 40ம் நம்பர் 307 ரூபாய்; 'செமி கோம்டு' ரகம், 16ம் நம்பர் 241 ரூபாய், 20 ம் நம்பர் 244 ரூபாய், 24 ம் நம்பர் 254 ரூபாய், 30ம் நம்பர் 264 ரூபாய்; 34 ம் நம்பர் 277 ரூபாய், 40ம் நம்பர் 297 ரூபாய்க்கு விற்கப்படுமென, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. கடைசியாக, ஜன., மாதம், கிலோவுக்கு, 20 ரூபாய் நுால் விலை குறைந்தது; பிறகு, நுால் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.