பேரூர்;கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் ஆறாம் நாளான நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, பட்டீஸ்வரருக்கு, அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, யாகசாலை பூஜை, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா, அஷ்டபலிபூஜைகள் நடந்தன.
மாலை, உற்சவர் சோமாஸ்கந்தர், அம்பாள், பட்டீஸ்வரர், பச்சைநாயகி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பின்னர், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும், சந்திரசேகரர், சவுந்திரநாயகி வெள்ளை யானை சேவையும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல், இன்று மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது.