செய்முறை: முதலில் அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் இரண்டு பல் பூண்டு, அரை இன்ச் இஞ்சி, 2 பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பதம் வரும் வரை வதக்கி, அதன் பிறகு இரண்டு பெரிய தக்காளி, 10 முழு முந்திரி, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து இவையெல்லாம் குழைந்து வரும் வரை நன்றாக வதக்கி, ஆறிய பின் மிக்ஸி ஜாரில் பேஸ்டாக அரைத்து கொள்ளுங்கள்.
அடுத்தது ஒரு கப் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற விடுங்கள். பின், அடுப்பில் பேன் வைத்து சூடானதும் நான்கு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை ஸ்பூன் வறுத்த சீரக பொடி, கால் டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை கலந்து கொள்ளுங்கள்.
கிரேவியில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கொள்ளுங்கள். மில்க் க்ரீம் இருந்தால் அதையும் சேர்க்கலாம். அதன் பிறகு ஊற வைத்த பன்னீரை இதில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து, கால் கப் பால் ஊற்றி நன்றாக கலந்து கொண்டு, அரை ஸ்பூன் கஸ்தூரி மேத்தி இலைகளை கலந்த பின் கால் டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து வெண்ணை பிரிந்து வந்தவுடன், கொத்தமல்லி தழைகளை தூவி கடைசியாக ஒரு ஸ்பூன் பட்டர் மேலே போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் பன்னீர் பட்டர் மசாலா ரெடி.