கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும்
திட்டப்பணிகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற கரூர் கலெக்டர் பிரபு சங்கர், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் -பணிகளின் முன்னேற்றம், புதிய திட்டப்பணிகளுக்கான தேர்வு செய்வது குறித்தும் கேட்டறிந்தார். 15வது நிதி குழு மானியத் திட்டத்தில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம், முதல்வர் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில், கூடுதல் பள்ளி கட்டடங்களை கட்டுவது, பழுதடைந்த பள்ளி கட்டடங்களை புனரமைப்பது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி திறன் மேம்பாட்டு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள வீடுகள் உள்பட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அன்புமணி
உள்பட பலர் பங்கேற்றனர்.