கரூர்: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன்
நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பங்கேற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கண்ணில் கருப்பு துணியை கட்டி கொண்டு, குறைந்தபட்சம் ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். அக
விலைப்படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில செயலாளர் தன பாக்கியம், செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்பட பலர்
பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களில், தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட செயலர் சுந்தரம், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் விஜயகுமார், மகாவிஷ்ணன் உள்பட பலர், கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.