ஆன்மிகம் �
மஹா கும்பாபிஷேகம்: இரண்டாம் கால யாகசாலை பூஜை - காலை 7:00 மணி. கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: சுதந்திரபுரம் கெங்கையம்மன் கோவில், ஆல் இந்திய ரேடியோ திட்டப் பகுதி, சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர்.
மஹா யாக விழா: உலக நன்மை வேண்டி மஹா யாகம். ஹோமங்கள், பூஜைகள், அபிஷேக ஆராதனை - காலை 6:00 மணி முதல். முதல் கால யாகம் ஆரம்பம் - மாலை 5:00 மணி முதல். இடம்: வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில், செங்குந்தகோட்டம், அனகாபுத்துார்.
மஹா வேள்வி: உலக நன்மைக்காக லலிதா பரமேஸ்வரியின் அருள்பெற வேண்டி, இந்து புரட்சி முன்னணி நடத்தும் யாகம். காலை முதல். இடம்: கே.வி.டி., கிரீன் சிட்டி, பழைய பெருங்களத்துார்.
சித்திரை பெருவிழா: சுவாமி வாகன புறப்பாடு காலை 9:00 மணி மற்றும் இரவு 8:00 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.
பிரம்மோற்சவம்: விமான சேவை - காலை, யானை வாகனம் - இரவு. இடம்: செவ்வேள் கோட்டம், வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் கோவில், சாமி பிள்ளை வீதி, சூளை.
சோமவார வழிபாடு: ஆராதனை, அன்னதானம், மதியம் 1:00 மணி. இடம்: அவுடத சித்தர் மலை மடம், ௬ - ஏ, டேங்க் தெரு, அரசன்கழனி.
� பொது �
இலவச கோடை கால வகுப்பு: சமஸ்கிருத பாரதி, இந்து இறை பணி மன்றத்தின் சார்பில், 7 முதல் 15 வயது சிறார்களுக்கான சுலோகம், கதைகள், வகுப்பு: மதியம் 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: 45/19, ஜுபிளி ரோடு, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 99401 22883.
இலவச மருத்துவ முகாம்: நீரிழிவு, பல், பொது மருத்துவ ஆலோசனை முகாம். பங்கேற்பு: மருத்துவர் எம்.எஸ்.மோனிகா, காலை, 8:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரை. இடம்: இன்பம் மருத்துவமனை, தெய்வசிகாமணி தெரு, பள்ளிக்கரணை. தொடர்புக்கு: 97907 81224.
எழுத்துக்கு மரியாதை: உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வு. சரோஜா மகாதேவன் எழுதிய 'இந்தியா - பாகிஸ்தான் போரும் விளைவும்' நுால் வெளியிடுபவர்: மருத்துவர் எச்.வி.ஹண்டே, பெறுபவர்: என்.தியாகராஜன், வாழ்த்துரை: முனைவர் ரவி தமிழ்வாணன், மதிப்புரை: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், மாலை 5:15 மணி. இடம்: கருத்தரங்க கூடம் 2வது தளம், அண்ணா நுாற்றாண்டு நுாலக கட்டட வளாகம், கோட்டூர்புரம்.
சென்னை விழா: சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்ள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா. காலை 11:00 மணி முதல். இடம்: தீவுத்திடல், சென்னை.