திருவொற்றியூர், திருவொற்றியூர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 55; கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்துகிறார்.
கடை ஊழியரான மகேஷ், 26, 'டிரெய்லர்' லாரிக்கு, வெல்டிங் வைக்கும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார்.
இதிலிருந்து வந்த தீப்பொறி, லாரி டீசல் டேங்கில் பட்டு, தீப்பற்றி எரிய துவங்கியது. தொடையில் தீக்காயம் ஏற்பட்ட மகேஷ், மற்ற ஊழியர்கள் பதறியடித்து வெளியேறினர். தீ மளமளவென பரவி, அருகில் இருந்த மற்றொரு டிரெய்லர் லாரியும் எரிய துவங்கியது.
திருவொற்றியூர், எண்ணுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இருப்பினும், இரு டிரெய்லர் லாரிகளும், தீயில் எரிந்து நாசமாயின.