பட்டினப்பாக்கம், சென்னை, பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சுகுணா, 31; வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் முகமது ஜாவீத், அமைந்தகரை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். இவர்களுக்கு ஆண், பெண் என, இரு குழந்தைகள் உள்ளன.
நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு சுகுணா தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அருகாமை வீட்டினர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் உள்ள அவர், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.