திருமங்கலம், கொரட்டூரைச் சேர்ந்த சரவணன், 34, ராமகிருஷ்ணன், 37, ஜெய்சங்கர், 64, ஆகிய மூவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, முகப்பேரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று, 'ஹூண்டாய்' சொகுசு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மது போதையில் வந்த அவர்கள், திருமங்கலம் அருகே, மீடியனில் காரை மோதி விபத்தில் சிக்கினர்.
காயமடைந்த மூவரையும், திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மூவரையும், போலீசார் கைது செய்தனர்.