சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரோஹித்குமார், நகேந்திரபாபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களது பைகைளை சோதனையிட்டதில், கட்டு கட்டாக பணம் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டோர், ஆந்திர மாநிலம், கர்னுாலைச் சேர்ந்த முகமது முதுசார் குர்ஷி, 36, நியாஸ் அகமது, 45, பெய்க் இம்ரான், 22, அப்துல் ரஹீம், 32, என்பதும், கைப்பற்றப்பட்ட 1.58 கோடி ரூபாய் 'ஹவாலா' பணம் என்பதும் தெரிந்தது.
ரயில்வே பாதுகாப்பு படையினர், பிடிபட்ட நால்வர் மற்றும் பணப்பைகளை, சென்னை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.