சிதம்பரம் : அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி சேர்மன் திருமாறன், மாவட்ட பொருளாளர் சுந்தர், ரங்கம்மாள் செல்வம் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசுகையில், 'பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவின் படி, கிழக்கு மாவட்டம் சார்பில், தமிழகத்தில் கள்ள சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து நாளை 29ம் தேதி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அசோகன், வாசுமுருகையன், சுந்தரமூர்த்தி, ஜோதிபிரகாஷ், நவநீதகிருஷ்ணன், சிவக்குமார், பாலகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகஜீவன் ராம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, விவசாய பிரிவு செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவரணி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.